ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிற்காக ஒன்றினைவோம் எனும் தொழிப்பொருளில் 8 ஆம் திகதி முதல் எதிர் வரும் 12
ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச பிரிவுகளிலும் பல அபிவிருத்தி
வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இதற்கு அமைய மட்டக்களப்பு
மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக 12 கிராம சேவை பிரிவுகளில் கிராம சக்தி வேலைத்திட்டங்கள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
மட்டக்களப்பு மாவட்டத்தில்
ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராம சக்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் நிகழ்வு
மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில்
நடைபெற்றது
மண்முனை வடக்கு பிரத்தேச செயலாளர் எம் தயாபரன் தலைமையில் நடைபெற்ற கிராம சக்தி நிகழ்வில் கிராம சக்தி அபிவிருத்தி உதவி பணிப்பாளர் சாந்தினி ராமநாயக ஜனாதிபதி செயலக
உதவி செயலாளர் அருணி சோமரத்ன , மண்முனை வடக்கு பிரதேச செயலக திட்டபிடல்
பணிப்பாளர் . எ .சுதர்சன் மற்றும் கிராம சக்தி நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர்கள் ,
கிராம சக்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 12 கிராம
சேவை பிரிவுகளின் , கிராம சக்தி சங்க நிர்வாக உறுப்பினர்கள் என பலர் ,கலந்துகொண்டனர்