தஞ்சையில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுவை நாடாளுமன்ற தொகுதி, 18 இடைத்தேர்தல் நடைபெறும் சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் பெரிய வெற்றியை பெறுவார்கள்.
அவர்களுக்கு வாக்களிக்க மக்கள் 100 சதவீதம் மனதளவில் தயாராகி விட்டனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்துகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகின்றனர். தஞ்சையிலும் ஏராளமான வளர்ச்சி பணிகளை நிறைவேற்றி உள்ளனர்.
தற்போது த.மா.கா.விற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏழை – எளிய மக்களின் சின்னமாகும். இந்த சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்பட்டதில் மகிழ்ச்சியே.
மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சியும், மத்தியில் பா.ஜனதா ஆட்சியும் தொடர்ந்து நடைபெறும்’ என தெரிவித்துள்ளார்.