49 வயதான ஆணொருவர் மற்றும் 44 வயதான பெண்ணொருவர் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
திருடப்பட்ட இரசாயனப் பொருட்களின் பெறுமதி 5 இலட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டொலர் என எட்மன்டன் பொலிஸ் சேவை குற்றப்பிரிவு அறிவித்துள்ளது.
நிறுவனத்திலிருந்து பாரிய தொகை இரசாயனப் பொருட்கள் திருடப்பட்டமை கடந்த 2010ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட உள்ளக கணக்காய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
அதனை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸ் விசாரணைகளில் குறித்த நிறுவனத்தின் ஊழியர் தனது துணையுடன் இணைந்து இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டது.