ற சோதனை தொடர்பாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வருமான வரித்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
சென்னை சேப்பாகத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறையில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணிமுதல் சுமார் 2 மணி நேரம் சோதனை நடத்தினர்.
பணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக புகார் எழுந்ததையடுத்து, இந்த சோதனை நடைபெற்றதாக தெரிகிறது. இந்த சோதனை குறித்து வருமான வரித்துறையினர் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த சோதனையில் பணம், ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்தும் தகவல் எதுவும் இல்லை.
இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் நேற்று நடைபெற்ற சோதனை தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வருமான வரித்துறையினர் இன்று அழைப்பாணை விடுத்துள்ளனர்.