குறித்த தாக்குதலில் நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்திருந்த நிலையில் தற்பொழுது 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி வேமுராய் துளசிராம்,எஸ்.ஆர் நாகராஜ், கே.ஜி.ஹனுமந்தராயப்பா,எம்.ரங்கப்பா,லட்சுமி,நாராயண் சந்திரசேகர்,ரமேஷ் உள்ளிட்ட எண்மர் உயிரிழந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் இன்று (திங்கட்கிழமை)தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதலில் 290 பேர் உயிரிழந்துள்ளதுடன், இவர்களில் 35 வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.