பிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
12-வயதான Zahraa Al Aazawi என்ற சிறுமி, கடந்த ஜூன் மாதம் 2018ஆம் ஆண்டு தனது தந்தையுடன் கல்கரியிலிருந்து எகிப்து சென்றபோது காணாமல்போனதாகக் கூறப்படுகின்றது.
இதையடுத்து, குறித்த சிறுமியின் தந்தை ரொறன்ரோ விமான நிலையத்தில் விசாரணை அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், காணாமல்போயுள்ள ஈராக் சிறுமியைக் கண்டுபிடிப்பதற்கு உதவிசெய்யுமாறு கல்கரியுள்ள ஈராக் சமூகத்திடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணாமல்போயுள்ள சிறுமி குறித்து தகவல் தெரிந்தவர்கள் 403-266-1234 அல்லது Crime Stoppers at 1-800-222-8477 என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.