போபாலிலுள்ள விஜய் நகர் பகுதியில் அமைந்துள்ள சிறப்பு பணி அதிகாரியான பிரவீன் காக்கர் வீட்டிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சோதனை நடவடிக்கையில் 15 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஈடுபட்டுள்ளது.
மேலும் போபால், இந்தூர், கோவா மற்றும் டெல்லி உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.