கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பகுதியில் காட்டு யானைகளால் விவசாய செய்கைகள் இன்று அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வாகனேரியில் தற்போது விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிலரது வயல் காணிகள் முள்ளிச்சேனை காட்டினுள் இருந்து வந்த யானையினால் வேளான்மை சேதமாக்கப்பட்டுள்ளது.
மேலும் வேளான்மை நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகள் தங்குவதற்கு அமைக்கப்பட்ட குடிசையையும் யானை தாக்கியுள்ளதுடன், குறித்த குடிசையில் விவசாயி அன்றைய தினம் இல்லாமையால் உயிர் தப்பியுள்ளதாக விவசாயி தெரிவித்தார்.
தற்போது விவசாய செய்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வேளான்மை வளர்ந்து வரும் நிலையில் யானைகள் வயல் நிலங்களுக்குள் நுழைந்து வேளான்மை பயிரை துவம்சம் செய்துள்ளது. இதனால் ஆரம்பத்திலேயே எமது விவசாயம் பாதிப்படைவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு யானை வேலி அமைத்து விவசாய நிலங்களையும், விவசாயிகளின் உயிரையும் காப்பாற்றுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.