நெடுஞ்சாலை 403இன் மேற்கு நோக்கிய வழித்தடத்தில், வின்ஸ்டன் சர்ச்சில் பவுல்வர்ட் பகுதியில், இன்று காலை 6.15 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தின் போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதனையும், மேலும் ஐந்து பேர் படுகாயமடைந் நிலையில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனை அடுத்து, ஏழாவது நபர் தமது வாகனத்தில் செல்ல மறுத்துவிட்டதாகவும் பீல் பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை விபத்துக்குள்ளான வாகனத்தினுள் சிக்குண்டிருந்த நிலையில், இரண்டு பேரை மீட்புப் படையினர் பலத்த முயற்சியின் பின்னர் வெளியே கொண்டுவந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வரும் நிலையில் அப்பகுதிக்கான போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.