57 இலங்கைப் பணியாளர்கள் இன்று(திங்கட்கிழமை) காலை இவ்வாறு மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
தொழில் நிமித்தம் குவைத்துக்குச் சென்று, அங்கு பல்வேறு இன்னல்கள், மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களுக்கே இவ்வாறு மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 9 ஆண்களும், 48 பெண்களும் உள்ளடங்குவதாகவும் அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் மீண்டும் நாடு திரும்பியுள்ளவர்கள் தத்தமது வீடுகளுக்குச் செல்வதற்கான கொடுப்பனவுகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.