இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்று (புதன்கிழமை) காலை பூஜையுடன் ஆரம்பமாகியது.
மும்பையில் தொடங்கியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் யோகிபாபு கலந்து கொள்ளவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னணி நடிகராக வலம் வரும் யோகிபாபு ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம். இந்தத் திரைப்படத்திற்கு தெலுங்கின் முன்னணி சண்டைக்காட்சி இயக்குநர்களான ராம் – லக்ஷ்மன் பணியாற்றவுள்ளார்கள்.
இத்திரைப்படம் மும்பையை கதைக்களமாகக் கொண்டது. ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதுடன், அனிருத் இசையமைக்கவுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
இத்திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி மிகச் சிறந்த வரவேற்பை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.