இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று(புதன்கிழமை) நெல்லியடி மாலுசந்திப் பகுதியைச் சேர்ந்த எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவன் பிற்பகல் 3.00 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்குச் செல்வதாகக் கூறிச் சென்ற நிலையில் அன்று மாலை தொண்டைமானாறுப் பகுதியிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிலர் காரில் தன்னை கடத்தி வந்து விட்டுவிட்டு சென்றுள்ளதாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து அங்கு சென்ற பெற்றோர் சிறுவனை அழைத்து வந்து நெல்லியடி பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டனர்.
முறைப்பாட்டில் சந்தேகம் கொண்ட பொலிஸார் தந்தையை தடுத்து வைத்ததுடன் சிறுவனிடம் விசாரணைகளை மேற்கொண்டபோதே, கல்வி நிலையம் செல்லாது கிரிக்கட் விளையாடச்சென்றதை மறைக்க, கடத்தல் நாடகம் ஆடியதாக சிறுவன் கூறியதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இரவு 9.00 மணியளவில் தொண்டைமானாறு பாலத்தில் சிறுவனால் மறைத்துவிடப்பட்ட துவிச்சக்கரவண்டி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தல் தொடர்பாக தகவல் பரவியதும் வடமராட்சி பகுதியில் சற்று பதற்றமானநிலை காணப்பட்டபோதும், சம்பவம் குறித்து பொலிஸார் உண்மையை வெளிக்கொண்டு வந்ததை அடுத்து பதற்றம் தணிந்தது