மாவீரர்களுக்கு இந்திய அரசு வழங்கும் மூன்றாவது மிகப்பெரிய விருதான ‘விர் சக்ரா’ விருதுக்கு விங் கொமாண்டர் அபிநந்தன் பெயரை விமானப்படை பரிந்துரைத்துள்ளது.
இந்திய முப்படைகளில் போர்க் காலங்களில் வீரதீர சாகசங்களை புரியும் மாவீரர்களுக்கு ‘பரம் விர் சக்ரா’, ‘மஹா விர் சக்ரா’ மற்றும் ‘விர் சக்ரா’ ஆகிய மூன்று மிகப்பெரிய விருதுகள் அளிக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்தியா மீது தாக்குதல் நடத்தவந்த பாகிஸ்தான் போர் விமானத்தை விரட்டிச் சென்று அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து பிடிபட்டு பின்னர் இந்திய அரசின் பெருமுயற்சியால் மீட்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கொமாண்டர் அபிநந்தன் வர்தமான் பெயரை ‘விர் சக்ரா’ விருதுக்கு பரிந்துரைக்க இந்திய விமானப்படை தீர்மானித்துள்ளது.
மேலும், பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி தரைமட்டமாக்கிய 12 விமானிகளின் பெயர்கள் ‘வாயு சேனா’ பதக்கத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.