வித்தியாலய அதிபர் க.தம்பிராசா தலைமையில் இந்த ஊர்வளம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். மேலும் அவ்வித்தியாலயத்தில் கல்வி பயின்ற ஆயிரக்கணக்கான பழைய மாணவர்கள், கிராம பொதுமக்கள், நலன்விரும்பிகள் என சுமார் 3000 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
வித்தியாலயத்தின் கடந்த கால சாதனைகளைப் பறைசாற்றும் வகையில் சித்தரிக்கப்பட்ட வாகன ஊர்தியுடன், மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் ஊர்வலமாக வித்தியாலயத்திலிருந்து சென்றனர்.
பாடசாலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்வளம் மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதி வழியாக களுதாவளை கொம்புச்சந்தி வரைச் சென்று, பின்னர் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலகம் வரை சென்று எருவில் கிராமத்தினூகடச் மீண்டும் வித்தியாலயத்தை வந்தடைந்தது.