ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண பிரபல பத்திரிகை ஒன்றுக்கு செய்தி வழங்கும் ஊடகவியலாளரான க.சரவணன் (வயது-24) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து இராணுவத்தினரை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் குறித்த ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவ்வாறு கைதாகிய ஊடகவியலாளரிடம் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.