LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, April 1, 2019

எல்லாளன் படைப்பிரிவைச் சோந்த மௌலி என அழைக்கப்படும் நபர் கைது


மட்டக்களப்பில் கைக்குண்டு துப்பாக்கிரவைகள்,  வாள்கள் உட்பட ஹரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியல்
 

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜயங்கேணி பிரதேசத்தில் கைக்குண்டு. வாள்கள், உட்பட  ஹரோயுன் போதைப் பொருளுடன் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய எல்லாளன் படைப்பிரிவைச் சோந்த மௌலி என்று அழைக்கப்படும் 26 வயதுடைய ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (31)  கைது செய்யப்பட்டு ; 14 நாட்கள் வினக்கமறியலில் வைக்குமாறு மட்டக்கள்ப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார் 

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி  எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் சம்பவதினமான  சனிக்கிழமை (30) குறித்த நபர் மறைந்திருந்த இடத்தை முற்றுகையிட்டு கைது செய்ததுடன் அவரிடம் ஒரு கைக்குண்டு , ரி. 56 ரக துப்பாக்கிரவைகள் 10, வாள்கள் மூன்று ,70 மில்லிக்கிராம் ஹரோயின் என்பற்றை  கைப்பற்றினர்.

இதில் கைது செய்யப்பட்டவர் விபுலானந்தா வீதி ஜயங்கேணியைச் சேர்ந்த 26 வயதுடைய மோகனதாஸ் ஜெகாந்தன் எனவும்  குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் எல்லாளன் படைப் பிரிவு என பொதுமக்களிடம் தெரிவித்து அச்சுறுத்தி வந்த மௌலி என அழைக்கப்படும் இவரை  பொலிசார் பிடிக்கச் செல்லும் நிலையில் அவர் பொலிசாரிம் இருந்து தப்பி காட்டூனில்வரும் மௌலி போன்று மரங்களில் தாவி தப்பியோடி வந்துள்ளார்.  என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது 

இச் சம்பவத்தில் கைது செய்தவரை (31) ஞாயிற்றுக்கிழமை  மட்டு  நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் 

  



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7