மேலும், இந்தியாவை தமிழர்களுக்கு சாதகமாக மாற்றும் செயற்பாடுகள் எதனையும் தமிழ்ப் பிரதிநிதிகள் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்தியாவை நம்பியோ சர்வதேசத்தை நம்பியோ நாம் இருக்கக்கூடாது. எமக்கான சரியான தலைவர்களை நாமே தெரிவு செய்ய வேண்டும்.
தற்போதைய தமிழ் தலைமைகள் மறைமுகமாக இந்தியாவின் எதிரிகளாக இருக்கின்றனர். தமிழ் பிரதிநிகளில் சிலர் தமிழர்களுக்கு எதிராக சர்வதேச சக்தியுடன் தொடர்பு வைத்துள்ளனர்.
1980ஆம் ஆண்டு காலப்பகுதியில், இந்தியா சிங்கள மக்கள் குறித்து கவலைப்படவில்லை. ஆனால் தற்போது அந்நிலை மாறியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.