இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது.
இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான சூத்திரதாரியை சட்டத்துக்குமுன் நிறுத்தி அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிணை வழங்கும் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் நீதி மன்றங்களிலுள்ள அரச நிதி மோசடி தொடர்பான வழக்குகள் அனைத்தையும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.