அந்தவகையில், அனைத்து வகையான அரை தானியங்கித் துப்பாக்கிகளையும் தடைசெய்வதற்கான அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆளுநரின் ஒப்புதலின் பின்னர் இன்னும் சில நாட்களில் இந்த சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.
நியூசிலாந்தில் கிறிஸ்ட் தேவாலய நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதி ஆகியவற்றில் கடந்த மாதம் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சென்ற மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக மக்களை சுட்டுக் கொன்றனர். இதில் 50 பேர் உயிரிழந்தனர்.
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பிரெண்டன் டரன்ட் கைதுசெய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து செமி தானியங்கி துப்பாக்கி மற்றும் ரைபில் ரக துப்பாக்கிகளை கடுமையான துப்பாக்கிகளுக்கான விதிகளுக்கு கீழ் கொண்டு வந்து தடை செய்வதாக நியூசிலாந்து அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.