டன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை 02 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டல திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறிப்பாக மத்திய, சப்பரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்கள் அம்பாறை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்கள் களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் 50 மில்லி மீற்றர் வரையில் கடும் மழை பெய்யக்கூடுமென அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.