வை தொகுதிகளுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று மாலை 6 மணியும் நிறைவுக்கு வந்துள்ளன.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அத்துடன், தமிழகத்தில் வெற்றிடமாக உள்ள 22 சட்டப் பேரவை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தலும் நடத்தப்படவுள்ளது.
இதை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களும் பிரசாரத்துக்காக தமிழ்நாடு வந்து சென்றனர்.
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஓய்ந்த பின்னர், பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரசாரம் முடிந்ததுள்ள நிலையில், தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளியாட்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் விதிகளின்படி, வாக்குப்பதிவு முடியும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரசாரம் உள்ளிட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
அதன் படி, தமிழகத்தில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்துள்ளது. இதனையடுத்து நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. மதுரையில் மாத்திரம் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலைக் கண்காணிக்க சென்னை தேர்தல் ஆணையகத்தில் விசேட கட்டுபாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளைய தினம் வாக்களிப்பு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.