ஜனாதிபதியின் 'நாட்டுக்காக ஒன்றினைவோம்' செயற்திட்டம் திங்கட்கிழமை முதல் 12ம் திகதி வெள்ளிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது.
அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி பாலத்தினை அண்டியுள்ள வாவிக்கரையை துப்பரவு செய்யும் வேலைத் திட்டம் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.
ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஜகத் குமார பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கார், செயலக சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி.தட்சாயினி யசோகாந் உட்பட சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது ஓட்டமாவடி பாலத்தினை அண்டியுள்ள வாவிக்கரையை ஓட்டமாவடி பிரதேச சபையின் சுத்திகரிப்பு உத்தியோகத்தர்கள் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.