திபதித் தேர்தல் நடத்தப்படும் என மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.
அத்துடன் இந்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்து தப்பிக்கவோ அல்லது தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதைத் தடுத்து நிறுத்தவோ எவராலும் முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் புதிய தேர்தல் முறைமைக்கு அமைவாக நடத்தப்பட்டமையினால் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் அதிகரிப்புடன் செலவுகளும் பிரச்சினைகளும் அதிகரித்திருந்தன. இந்த நிலையை எதிர்வரும் மாகாண சபைகளுக்கான தேர்தலின் போது இடமளிக்க முடியாது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டியுள்ளதை மறந்துவிடக் கூடாது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்பார்ப்பாகவும் உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும் இந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது.
அரசியல் நெருக்கடி நிலைமையின் பின்னர் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டிரந்தன. இருப்பினும் தற்போது ஜனாதிபதித் தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டியது அவசியமாகும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரோ அல்லது தேர்தலின் பின்னரோ மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறுமாக இருந்தால் அது நிச்சியமாக புதிய முறையில் நடத்தப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.