அதேநேரம், தமிழக அரசாங்கம் அடிப்படை வசதிகளைக் கூட மக்களுக்காக இதுவரை செய்துகொடுக்கவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (வியாழக்கிழமை) மதுரையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டுத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர், “இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்கள் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவு வாய்க்கால் போன்றவற்றை கூட செய்து கொடுக்கவில்லை. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மொகஞ்சதாரோவில் கூட கழிவு வாய்க்கால் வசதிகள் இருந்ததாக அறியப்படுகின்றது. ஆனால் தற்போது எந்த வசதியும் செய்யப்படாத நிலையுள்ளது. ஆட்சியில் இருந்தவர்கள் தங்களை மட்டுமே வளப்படுத்திக் கொண்டுள்ளனர்.
தேர்தல் செலவு என்பது நமது வியர்வையும் இரத்தமும் தான். அதில் எனது இரத்தமும் கலந்திருக்கும். தமிழகமே நமது இலட்சியம். என் இலக்கு தமிழகம் தான். பல ஆண்டுகளாக தமிழகத்தின் குரல் தலைநகரில் ஒலிக்கவில்லை. அந்தக் குரல் கேட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. தமிழனின் குரல் தலைநகரில் கேட்க வேண்டும்.
தமிழகத்திலிருந்து ஏற்கனவே சென்றவர்கள் அரசுக்கு தாளம் போடுபவர்களாகவே செயற்பட்டுள்ளனர். எனவேதான் ஜாதி, மதம் பார்க்காமல் திறமையை மட்டும் தேர்வு செய்து உங்கள் முன் நிறுத்தியுள்ளோம்” என அவர் மேலும் கூறினார்.