இந்த சரணாலயம் சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்தும் நோக்குடனும், நாய்களின் அதிக இனப்பெருக்கத்தால், வீதியோரங்களில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் நாய்களை பாதுகாப்பதற்காகவும் குறித்த நாய்கள் சரணாலயம் திறக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன், நல்லை ஆதீன குருமுதல்வர், அமெரிக்காவின் ஹவாய் சைவ ஆதீன சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு குறித்த சரணாலயத்தை திறந்து வைத்தனர்.