சப்புகஸ்கந்தையிலுள்ள களஞ்சியசாலை தொகுதியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், நாளை(திங்கட்கிழமை) இந்த போதைப்பொருட்கள் அழிக்கப்படவுள்ளன.
போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் சமந்த கித்தலவஆராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கைக்கான அரச இரசாயண பகுப்பாய்வின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளல் என்பன தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகள் முன்னிலையில் இந்த கொக்கேய்ன் போதைப்பொருளை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.