சுட்டுக்கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. .
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையிலேயே பயங்கரவாதியொருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
பாரமுல்லா மாவட்டத்திலுள்ள வாட்டர்கம் பகுதி வழியாக இராணுவத்தின் ஒரு படைப்பிரிப்பிரிவினர் சென்றுள்ளனர். இதன்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதன்போது தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக இராணுவ தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் உயிரிழந்த பதீவிரவாதியிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 3 கையெறி குண்டுகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் இராணுவ தகவல்கள் குறிப்பிடுகின்றன