மாக ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தமது கவலையை தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள் இந்த துயர சம்பத்தில் பங்குகொள்வதாகவும் அவர்கள் எப்பொழுதும் பிரான்ஸ் மக்களின் சுகதுக்கத்தில் இணைந்திருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
850 வருடங்கள் பழைமையான நோட்ரே டாம் தேவாலயம், ஐரோப்பிய கட்டிட கலையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வானுயர்ந்து காணப்பட்டது.
12ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட குறித்த கட்டிடம் வரலாற்று பொக்கிஷமாக காணப்படுவதுடன் வருடந்தோறும் மில்லியன் கணக்காக பார்வையாளர்கள் அங்கு பயணிக்கின்றனர். இந்நிலையில், நேற்று அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பல நாடுகள், சர்வதேச அமைப்புக்கள் தமது கவலையை வெளிப்படுத்தியும், மீள் கட்டுமானத்துக்கான நிதியளிப்புக்களை வழங்கத் தயாராகியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.