குறித்த 40ஆவது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கிளிநொச்சி அலுவலகத்திற்காக 40 இலட்சம் பெறுமதியில் அமைக்கப்படவுள்ள விடுதிக்கும், 15 இலட்சம் பெறுமதியில் அலுவலகத்தை மேலும் விரிவாக்குவதற்காகவும், அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.
கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் கிளிநொச்சியில் அமைந்துள்ள வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்தில் குறித்த அடிக்கல் நாட்டப்பட்டது.
இதேவேளை 40 பயனாளிகளிற்கு தலா பதினைந்தாயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகளும், சீமெந்து பைகளும் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா,
“40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மாதிரி கிராமங்களை அமைப்பதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அந்தவகையில் 4 வருடங்களாக இழுபறி நிலையில் காணப்பட்ட வீட்டுத்திட்டம் தற்போது விரைவாக வழங்கி முடிப்பதற்கு நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பிரதமர் பணிப்புரை வழங்கியுள்ளதுடன் மீள்குடியேற்ற அமைச்சும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் இணைந்து மக்களிற்கு வீட்டுத்திட்டங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களிற்கு வீட்டுத்திட்டங்களை வழங்கிவரும் அமைச்சருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.