கல்வி முறை மாற்றத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான ஒன்ராறியோ பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ரொன்ரோ மாணவர்கள் நேற்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்ஸ்ராகிறாம் சமூக வலைத்தளம் ஊடாக இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
வீதியின் இரு மருங்கிலும் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பேரணியாக நகர மண்டபம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.