குறித்த நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பூமிக்கடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பல கட்டிடங்கள் குலுங்கியதுடன், மணிலாவில் தற்பொழுதும் நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றமையால் ஆயிரக்கணக்கான மக்கள் பிரதான வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.