உலக
ஓட்டிச விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான
விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று மட்டக்களப்பு
"தீரணியம்" நிலையத்தில் இன்று (05) நடைபெற்றது
ஏப்ரல்
2 ஆம் திகதி உலக ஓட்டிசம் தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு வருடந்தோறும் ஓட்டிச விழிப்புணர்வு
நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன
இதற்கு அமைய உலக ஓட்டிசம் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு
மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு
செயலமர்வு இன்று
நடைபெற்றது
ஊடகவியலாளர்களுக்காக
நடைபெற்ற செயலமர்வில் மட்டக்களப்பு "தீரணியம்" ஓட்டிசம் நிலையத்தில் மூளைவிருத்தி நிலை கோளாறுகளால் பதிப்பப்பட்டுள்ள 40 சிறுவர்களை தற்போது வரை பராமரித்து, சிறுவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் ஓட்டிசம் மற்றும் "தீரணியம் நிலையத்தின் செயல்பாடுகள்
தொடர்பாக ஊடகவியாலர்களுக்கு தெளிவு படுத்தும் விழிப்புணர்வு செயலமர்வாக இன்று நடைபெற்றது
மட்டக்களப்பு தீரனியம் திறந்த பாடசாலை பயிற்சி
நிலையத்தின் அதிபர் அருட்சகோதரர் மைக்கல் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் தீரனியம் திறந்த
பாடசாலை பயிற்சி நிலையத்தின் உளநல மருத்துவ சேவை ஆலோசகரும் .வாழைச்சேனை ஆதார
வைத்தியசாலை வைத்திய நிபுணர் ஜூடி
ஜெயகுமார் , தீரனியம் திறந்த
பாடசாலை பயிற்சி நிலையத்தின் அருட்சகோதரர் ஸ்டீபன் மெதிவு மற்றும் மட்டக்களப்பு
மாவட்ட ஊடகவியலாளர்கள் செயலமர்வில் கலந்துகொண்டனர்