திருத்தப்பணிகள் காரணமாக நேற்று (சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் 24 மணித்தியாலங்கள் கோட்டை, புறக்கோட்டை, வௌ்ளவத்தை, பம்பலப்பிட்டி, பொரளை உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தது.
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நீர்வெட்டு வழமைக்குத் திரும்பும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இருப்பினும் திருத்தப்பணிகள் இதுவரை நிறைவடையவில்லை என தெரிவித்துள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் சில மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு நீடிக்கும் என அறிவித்துள்ளது.
அதேவேளை சில பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்திலும் நீர் விநியோயகம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மின்வெட்டும் சில பகுதிகளில் அமுல்படுத்தப்படுவரும் நிலையில் தற்போது நீர் இன்றியும் மக்கள் அவதியுற்றுள்ளனர்.