க்கிழமை நிகழ்ந்த பயங்கரவாதக் குண்டுத்தாக்குதலில் பிரித்தானியாவைச் சேர்ந்த பென் நிக்கொல்சன் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் இருவரைப் பறிகொடுத்திருந்தார்.
ஷங்ரி-லா நட்சத்திரவிடுதிக் குண்டுவெடிப்பில் பென் நிக்கொல்னின் மனைவி அனிற்ரா வயது 42, மகன் அலெக்ஸ் வயது 14, மகள் அன்னாபெல் வயது 11 ஆகியோர் உயிரிழந்தனர்.
பென் நிக்கொல்சன் தனது குடும்பத்தினைப் பறிகொடுத்து துயரம் தாங்கமுடியாத நிலையில் கண்ணீர்மல்க அவர்களுக்கு இறுதிஅஞ்சலி செலுத்தினார்.
ஈஸ்ரர் விடுமுறையைக் கழிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குச் சென்று கொழும்பு ஷங்ரி-லா நட்சத்திரவிடுதியில் தங்கியிருந்தபோதே இந்த அனர்த்தம் நேர்ந்தது.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் மேலும் ஐந்து பிரித்தானியப் பிரஜைகளும் கொல்லப்பட்டனர்.