குறித்த இடத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக காணியை துப்பரவு செய்யும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
பெகோ இயந்திரம் கொண்டு துப்பரவு பணியில் ஈடுபட்டபோது, அந்த பகுதியில் 2 பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி ரவைகள் மற்றும் மகசின் உட்பட மிதிவெடிகள் காணப்பட்டுள்ளன.
இதனை அவதானித்த துப்பரவு பணியில் ஈடுபட்டவர்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வெடிபொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், துப்பரவு பணிகளும் இடைநிறுத்தப்படடுள்ளன.
அத்தோடு குறித்த பகுதியில் மேலும் வெடிபொருட்கள் காணப்படாலாமென சந்தேகிக்கும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் தேடுதலின் பின்னர் துப்பரவு பணிகளை முன்னெடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.