ராஜஸ்தானில் உள்ள நல்பிகானர் விமானப்படை தளம் அருகே இந்த நேரடி மோர்ட்டார் குண்டு ஒன்றினை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். இந்த வெடிகுண்டு தொடர்பாக பொலிஸாரினால் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேபோன்று, பூனேவில் உள்ள பிம்பல்வாடி கிராமத்தில் இன்று (புதன்கிழமை) சந்தேகத்திற்குள்ளான நபரிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் வெடிமருந்துகள் மற்றும் 59 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த நபரை கைதுசெய்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து, அங்கு பல்வேறு பகுதிகளிலும், முக்கிய பொது இடங்களிலும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் பொலிஸார் தீவிர சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.