த தீ விபத்து உள்ளுணர்வை ஆழமாக பாதித்துள்ளது என யுனெஸ்கோ தலைவர் ஓட்ரி அசூலே தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து பரிஸ் மக்களுடன் யுனெஸ்கோ எப்போதும் உறுதுணையாக நிற்கும் எனத் தெரிவித்த அவர், விலை மதிப்பில்லாத இந்த பாரம்பரியத்தினை மீட்க நாங்கள் என்றும் துணை நிற்போம் எனவும் கூறியுள்ளார்.
அத்தோடு இவ்விடயம் தொடர்பாக யுனெஸ்கோ தற்போது கண்காணித்து வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
850 வருடங்கள் பழைமைவாய்ந்த இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில் கூரைப் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை தீ விபத்து ஏற்பட்டது.
சுமார் 8 மணித்தியாலங்களுக்கும் மேலாக இடம்பெற்ற கடும் போராட்டத்தின் பின்னர் குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீ விபத்திலிருந்து தேவாலயத்தின் இரண்டு மணிக்கோபுரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே யுனெஸ்கோ தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.