மேலும் அச்சுறுத்தும் வகையிலும் மதச்சிறுப்பான்மையினரின் மனதில் நிரந்தரமான பயத்தை உருவாக்கும் வகையிலும் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலிற்கு பல உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் மதவெறி, இனவெறி உள்ளிட்ட எவ்வித சக்திகள் இருந்தாலும் உடனடியாக அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். அண்மையில் நியுசிலாந்தில் தொடங்கி உலகின் பல நாடுகளிலும் பெருகிவரும் வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டும் தாக்குதல் சம்பவங்கள் மனிதநேயத்திற்கு விடப்பட்ட பெரும் சவாலாகும்.
மனிதாபிமான சக்திகள் இணைந்து இதனை முறியடிக்க வேண்டும். இலங்கை தொடர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைந்து நீதி கிடைக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.