தீவிரவாதிகளின் இரகசிய பதுங்கு குழியை பாதுகாப்பு படையினர் இன்று கண்டுபிடித்துள்ளனர்.
புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் காஷ்மீர் மாநிலத்தில் தலைமறைவாக இருந்துவரும் தீவிரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பிலும் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தின் தெற்கு பகுதியிலுள்ள புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட மன்டுனா என்ற கிராமத்தில் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் அங்கு தீவிரவாதிகளின் ரகசிய பதுங்கு குழியை கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அப்பகுதி பொலிஸார் அந்த கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.