இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் இன்று(திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு சாடியுள்ளார்.
ஆனந்த சுதாகரன் விடயத்தில் நாம் பலமுறை பிரதமர் மற்றும் அமைச்சரை சந்தித்து பேசியுள்ளோம். அத்துடன், ஆதனந்த சுதாகரனின் பிள்ளைகளை சந்தித்த ஜனாதிபதி, சித்திரை வருடத்திற்கு முன்னர் விடுதலை செய்வதாக கடந்த 2018ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார்.
எனினும் 2019ஆம் ஆண்டு சித்திரை வருடம் நெருங்கி வருகின்ற நிலையில், ஜனாதிபதி ஆதனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் சாடியுள்ளார்.