கொழும்பில், இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாட்டின் கடன் சுமையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து வங்கிகளில் நிறைவேற்று அதிகாரிகள், நிதியமைச்சின் பிரதானிகள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதானிகளுடன் கலந்துரையாடியுள்ளோம்.
இதுகுறித்து தற்போது அறிக்கையும் எமக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, வங்கிகளில் வழங்கப்படும் கடன் தொகையின் வட்டி வீதத்தை மட்டுப்படுத்த நாம் தீர்மானித்துள்ளோம்.
ஏனெனில், வியாபாரிகளுக்கு கடன் சுமை அதிகரிக்கும்போது, பொருளாதார ரீதியாக நாடு பாதிப்படைகிறது. அவர்களுக்கு வியாபாரம் செய்யும் வழிகள் அடைக்கப்படுகிறது. இதனாலேயே நாம் இவ்வாறான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
ஒக்டோபர் சூழ்ச்சியினால் 10 பில்லியன் வருமானம் நிறுத்தப்பட்டது. இவ்வாறான நிலையில், பொருளாதார ரீதியாக நாட்டை மீண்டும் பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
இதுகுறித்து, அடுத்த 6 வாரங்களில் மீண்டும் கூடி ஆராயவும் நாம் தீர்மானித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.