மேலும் இன்றைக்கு எந்த மக்களால் தேர்தல் களத்தில் தோற்கடிக்கப்படுகிறோமோ அவர்களே ஒருநாள் எங்களை தூக்கி கொண்டாடுவார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக புதுவை உள்ளிட்ட நாற்பது மக்களவை தொகுதிகளிலும் தனித்து களம் கண்டுள்ள நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருகிறார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் எந்த அளவுக்கு பிரச்சாரம் மேற்கொண்டாலும் தேர்தல் சமயங்களில் வாக்கு பெற கட்சிகள் பணம் கொடுப்பது கடுமையான மனசோர்வினை உண்டாக்கும்.
ஆனால், அதையெல்லாம் கடந்து எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் பயணம் என்றாலும் ஒரு காலடித் தடத்துலதான் தொடங்கியாக வேண்டும் என்ற எங்கள் தலைவர் பிரபாகரன் வழியில் பயணிக்கிறோம்.
நாம் தமிழர் கட்சியும் எதிர்வரும் காலங்களில் தவிர்க்க இயலாத சக்தியாய் மாறும் இன்றைக்கு எந்த மக்களால் தேர்தல் களத்தில் தோற்கடிக்கப்படுகிறோமோ அவர்களே ஒருநாள் எங்களை தூக்கி கொண்டாடுவார்கள்” என கூறியுள்ளார்