க்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் மாவட்டம் கந்துவாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை விமர்சித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், முஸ்லிம்கள், சிறுபான்மையினரை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்ற நச்சு கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலம் பா.ஜ.க.தான் நாட்டை பிரிக்க விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை அப்துல்லா குடும்பத்தினரும், முப்தி குடும்பத்தினரும் ஜம்மு – காஷ்மீரை மூன்று தலைமுறைகளாக சீரழித்துவிட்டனர். அவர்கள் ஒன்றுதிரண்டு, என்னை எவ்வளவு வேண்டுமானாலும் தூற்றலாம். ஆனால் இந்த நாட்டை பிரிக்க முடியது. அதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது