மசூதிகளில் பெண்கள் தொழுகை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த மனுவை விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம், இவ்விடயத்தில் மத்திய அரசை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த காரணத்துக்காகவே இந்த வழக்கினை எடுத்துக்கொண்டதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
புனேவை சேர்ந்த தம்பதியினரே இந்த மனுவை தாக்கல் செய்திருந்ததை குறிப்பிடத்தக்கது