சுகாதார போசனை
மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் அனுசரணையில் நிலெட் நிறுவனத்தின் மேற்பார்வையில்
ஒறிஎன்ட் நிறுவனத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய
உத்தியோகத்தர்களுக்கு நடாத்தப்பட்ட 18 நாள் தமிழ் மொழி பயிற்சி
பாட நெறியின் இறுதி நாள் கலாசார நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
அரச மொழிக்கொள்கையினை அமுலாக்கும் பொருட்டு தேசிய
சகவாழ்வு கலந்துரையாடல்கள் அமைச்சின் கீழ் நடைமுறை படுத்தி வருகின்ற தேசிய மொழி கொள்கை வேலைத்திட்டத்தின் தமிழ் மொழி அரச அலுவலக அதிகாரிகளுக்கு சிங்கள மொழியும் , சிங்கள மொழி அரச அலுவலக அதிகாரிகளுக்கு
தமிழ் மொழியும் கற்பிக்கும் முறைமையினை தேசிய மொழி மற்றும் பயிற்சி நிறுவனம் மாகாண ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது .
இதன் கீழ் சுகாதார
போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் அனுசரணையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்களுக்கு தமிழ் ,மொழி தொடர்பான 18 நாள் பயிற்சி நெறி நடாத்தப்பட்டு
பயிற்சி நெறியினை நிறைவு செய்த தாதிய உத்தியோகத்தர்களின் இறுதி நாள் கலாசார
நிகழ்வு இன்று நடைபெற்றது
மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலை பிரதான தாதிய உத்தியோகத்தர் கனகராஜா ஒழுங்கமைப்பில் போதன வைத்தியசாலை
பணிப்பாளர் கலாரஞ்சனி கணேசலிங்கம் .தலைமையில் நடைபெற்ற
நிகழ்வில் பிரதம அதிதியாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாகிர் மௌலானா ,சிறப்பு
அதிதியாக வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் வைத்தியர் மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
பணிப்பாளர் வைத்தியர் கலாரஞ்சனி
கணேசலிங்கம் .தலைமையில்
போதனா
வைத்தியசாலை கேர்போர்கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் தாதிய உத்தியோகத்தர்களின்
கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் வைத்தியசாலை வைத்தியர்கள் ,தாதிய
உத்தியோகத்தர்கள் ,கல்ந்துகொன்டனர்