ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவின் பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட நாசிவந்தீவு சிவ வித்தியாலய மாணவர்களினால் மரங்களை பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் வீதி நாடகம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் தெ.ஜெயப்பிரதீபன் தலைமையில் நடைபெற்ற மரங்களை பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளிலான வீதி நாடகம் நாசிவந்தீவு ஆலையடி வீதியில் இடம்பெற்றது.
சுற்றாடல் குழு பொறுப்பாளர்களான லோ.கேசவன், போ.விசாந்தினி, ர.ஜெகவீரன் ஆகியோரின் வழிகாட்டலில் பொதுமக்கள் மத்தியில் மரங்களை பாதுகாத்து சூழலை நேசிப்போம் மற்றும் மரங்களை அழிப்பதை தடை செய்யும் எண்ணக்கருவில் வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.
தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டி செல்வதால் நாட்டின் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகின்றது. இதனை தடுக்கும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டு வரும் வகையில் வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டதாக வித்தியாலய அதிபர் தெ.ஜெயப்பிரதீபன் தெரிவித்தார்.
இவ்வீதி நாடகத்தினை கிராம மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.