அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயமாக வெற்றியடையும் எனவும், வெற்றியை பெறும் வியூகம் தமக்குத் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பலாங்கொடை பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் இன, மத பேதமின்றி செயற்படுவதே இந்த அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் எனக் குறிப்பிட்ட அவர், கடந்து வந்த நான்கு வருடங்களிலும் எமது அரசாங்கம் வேறுபாடற்ற சேவைகளையே மக்களுக்கு வழங்கியுள்ளது என கூறினார்.
ஆனால் எங்களின் செயற்பாடுகளை சிலர் புரிந்துகொள்ள மறுக்கின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.