இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதை உளவியல் ஆய்வு மையம் வழங்கியுள்ளது.
மேற்படி 2019ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதினை கடந்த 31 ஆம் திகதி மட்டக்களப்பு ஊறணி கிரிபாேஜன் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கதிர்காமத்தம்பி குருநாதன் பெற்றுக் கொண்டார்.
இவர் தமிழர் நிலங்களளை அரசாங்கம் அபகரிப்பதனை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் 2014ஆம் ஆண்டில் எடுத்துரைத்திருந்தார்.
இவர், 70 வருடங்களாக சிங்கள மொழியில் மட்டுமே இருந்த காணிச் சட்டப் புத்தகத்தை தமிழில் எழுதி வெளியிட்டிருந்தார். இதனால் தமிழ் உத்தியோகத்தர்களும், பொது மக்களும் பலன் அடைந்துள்ளனர். இப்புத்தகம் 2006இல் முதல் பதிப்பு செய்யப்பட்டு இப்போது 3 பதிப்புக்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், வடக்கு கிழக்கு மாகணங்களில் 1400 இற்கும் மேற்பட்ட காணி பயிற்சிப் பட்டறைகளை அமைத்துள்ளார். அத்துடன் பல காணி சட்டப் புத்தகங்களை இலகு தமிழில் வெளியிட்டுள்ளார்.
தற்போது விசேட மத்தியஸ்த்தர்கள் சபையின் (காணி) மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தவிசாளராக கடமையாற்றும் இவர், ஏராளமான காணிப் பிணக்குகளுக்கு சமாதான வழியில் தீர்வு கண்டுள்ளார். இதனால் நீதிமன்றத்துக்கு ஏழை மக்கள் சென்று பணம் செலவளிப்பது தடுக்கப்பட்டுள்ளது.
எனவே இவரின் மக்கள் சேவையைப் பாராட்டி இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.