பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழுள்ள தேசிய
உற்பத்தித்திறன் செயலகத்தினால் அரசதுறை, பாடசாலைத்துறை, மற்றும் தனியார் துறையினர் என்ற வகையில் தேசீய ரீதியில் சிறந்த
சேவையாற்றுகின்ற நிறுவனங்களைத் தெரிவு செய்யும் வகையிலும் மேலும் சிறந்த சேவையினை
வழங்குவதற்கு ஊக்குவிக்கும் முகமாக வருடா வருடம் தேசிய உற்பத்தித்திறன்
போட்டித் தொடரினை நடாத்தி அவற்றில் வெற்றி
பெறும் நிறுவனங்களுக்கு பொன் விருதும் , முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம், விசேட திறமைச் சான்றிதழ், திறமைச் சான்றிதழ், என்ற ரீதியில் வழங்கி வருகின்றது .
அந்த வகையில் அரச துறைக்கான தேசிய
உற்பத்தித்திறன் போட்டித் தொடர் -2018 இல் மட்டக்களப்பு மாவட்ட செயலகமானது முதன்
முறையாக போட்டியிட்டு தேசிய ரீதியாக மாவட்ட செயலகங்களுக்கிடையிலான போட்டியில்
3ம் இடத்தைப் பெற்று சிறந்த சேவையை
வழங்கும் நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விருது வழங்கும் விழா 26.03.2019
ஆம் திகதி பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம் பெற்றது.
இவ்விருதினை மட்டக்களப்பு மாவட்ட
அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மாணிக்கம். உதயகுமார் தலைமையில் உதவி மாவட்ட
செயலாளர் , ஆ.நவேஸ்வரன் ,கணக்காளர் கே.பிரேமகுமார், மற்றும்
நிர்வாக உதவியாளர், கி.தயாபரன் ,ஆகியோர் பெற்றுக் கொண்டனர்
.
சிறந்த அர்ப்பணிப்பு மிக்க பொது
மக்கள் சேவையை வழங்கி வருகின்ற மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட
செயலாளருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களுக்கும் அவரது வழிகாட்டல் மற்றும்
தலைமையிலான உத்தியோகத்தர் குழுவினருக்கு பாராட்டுதலையும் தெரிவித்தனர்.
2016ஃ2017 ஆம் ஆண்டிற்கான
உற்பத்தித்திறன் போட்டித் தொடருக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச மற்றும்
பாடசாலைத்துறைகளில் பின்வரும் நிறுவனங்கள் போட்டியிட்டு 2018 இல் வெற்றி
பெற்றுள்ளது.
அவையாவன மாவட்ட செயலக ரீதியாக
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் 03 ம் இடத்தையும் ,பிரதேச செயலக ரீதியாக காத்தான்குடி 02
ம் இடத்தையும், மண்முனை வடக்கு, பட்டிப்பளை, களுவாஞ்சிகுடி, ஆகிய பிரதேச செயலகங்கள் 03ம் இடத்தையும், ஆரையம்பதி, கோரளைப்பற்று மத்தி,செங்கலடி, ஆகிய பிரதேச செயலகங்கள் விசேட
சான்றிதழ்களையும், வாகரை, கிரான், ஆகிய பிரதேச செயலகங்கள் திறமைச்
சான்றிதழ்களையும், பெற்றுக் கொண்டது.
அடுத்து வைத்தியசாலை ரீதியாக
களுவாஞ்சிகுடி 02ம் இடத்தையும், ஆரையம்பதி, மகிழடித்தீவு, 03ம் இடத்தையும், பெற்றுள்ளது
.
பிரதேச சபை ரீதியாக வாகரை, கொக்கட்டிச்சோலை என்பன விசேட சான்றிதழ்களையும், நகரசபை ரீதியாக காத்தான்குடி
விசேட சான்றிதழ்களையும், பொலிஸ் நிலையம் ரீதியாக மங்களகம விசேட
சான்றிதழ்களையும், பாடசாலை ரீதியாக வின்சன்ற் உயர்
தரக்கல்லூரி ,கற்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கொக்குவில்
விக்னேஸ்வரா வித்தியாலயம் போன்ற
பாடசாலைகள் திறமைச் சான்றிதழ்களையும், பெற்றுள்ளது.