(ஜெ.ஜெய்ஷிகன்)
வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச பொலிஸ் ஆலோசனைச் சபையின் ஏற்பாட்டில் சிவில் பாதுகாப்பு குழுக்களுடன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (25) பிற்பகல் பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.
வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எஸ்.தனஞ்ஐய பெரமுன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஐP.எஸ்.nஐயசுந்தர கலந்து கொண்டு இன்றைய பாதுகாப்புத் தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளித்தார்.
நாளை வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் மத அனுஸ்டானங்களை மேற் கொள்வதற்கு பொலிசார் பாதுகாப்புத் தரமுடியுமா எனக் கோரப்பட்டதற்கு அமைவாக பள்;ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களுக்கு தேவையான பாதுகாப்பை பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.
புலனாய்வு தகவல்களின்படி மத நிறுவனங்களை தற்கொலையாளிகள் தாக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாகத் தெரிவித்ததுடன் அதற்காக வேன், மோட்டார் சைக்கிள்கள் , சூட்டி மோட்டார் சைக்கிள்கள், மகேந்திரா வாகனங்கள் மற்றும் பல்சர் மோட்டார் சைக்கிள்களின் மூலம் தாக்குதல்களை மேற்கொள்ளப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. குறித்த வாகனங்களின் இலக்கங்கள் (இணைக்கப்பட்டுள்ளது).
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெயசிங்க, பிரதேச பொலிஸ் ஆலாசனைச் சபை உறுப்பினர்கள் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.